Heart Attack Vs Cardiac Arrest: 24 மணி நேரத்துக்கு முன் தெரியும் அறிகுறிகள்- தவற விட்டுறாதீங்க
உலகளவில் தற்போது மோசமான வாழ்க்கை முறை காரணமாக இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
பலரின் உயிரை காவு வாங்கும் மாரடைப்பு என்பது இரத்தக்குழாய்களில் அடைப்பு பொழுது ஏற்படுவது, அதே சமயம் கார்டியாக் அரெஸ்ட் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நிலையாகும்.
ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்து விட்டால் உடனடியாக அவரின் உயிரை காப்பாற்ற சிபிஆர் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த சிகிச்சை கொடுத்த கொஞ்சம் நேரம் சென்றாலும் உயிர் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது.
கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டவர்களில் 10% பேர் மட்டுமே உயிர் பிழைக்கிறார்கள் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த நோயின் தாக்கம் நோய்களே இல்லாதவர்களுக்கு கூட வரலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

என்ன நோயாக இருந்தாலும், பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்னர் சில அறிகுறிகளை காட்டும். அந்த வகையில், வந்தவுடன் உயிரை பறித்துச் செல்லும் கார்டியாக் அரெஸ்ட் நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
அறிகுறிகள்
1. வழக்கமாக உங்களுக்கு மூச்சு விடும் பொழுது இருந்த சுதந்திரம் இந்த நோயின் தாக்கம் வரப்போகிறது என்றால் கொஞ்சம் சிரமமாக இருக்கும். சுவாசத்தை உள்ளே எடுத்து, வெளியில் விட முடியாத நிலை உருவாகும். அப்படியான அறிகுறி தெரிந்தால் அது கார்டியாக் அரெஸ்ட் அபாயமாக இருக்கலாம்.
2. கார்டியாக் அரெஸ்ட் நோயால் பாதிக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் நெஞ்சு பகுதியில் ஒரு மாதிரியான அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியாக இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்த்து ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

3. வியர்வை என்பது சாதாரணமான விடயமாக இருந்தாலும், கடினமான வேலை இல்லாமல், ஓய்வாக இருக்கும் சமயத்தில் வியர்வை அதிகமாக இருந்தால் அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். மருத்துவரை பார்ப்பது நல்லது.
பாதிப்பு அதிகம் யாருக்கு?
திடீர் கார்டியாக் அரெஸ்ட்டினால் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் பாதிக்கப்படும் பொழுது மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை சந்திக்கின்றனர். அதே சமயம் பெண்கள் அதிகமாக மூச்சுத்திணறல் பிரச்சினையை மாத்திரம் தான் அனுபவிக்கிறார்கள். எனவே அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |