காலையில் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... சிறுநீரக கல் பிரச்சனையாக கூட இருக்கலாம்
சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருந்தால், காலையில் ஏற்படும் இந்த அறிகுறிகள் மூலமாக நீங்கள் அதனை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரக கல்
சிறுநீரகத்தில் கற்கள் என்பது இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது. வலிமிகுந்த காணப்படுவதுடன், இதனால் பல சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.
நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள தாதுக்கள் அல்லது உப்பு குவிந்து கடினமான துகள்களின் வடிவத்தினால் இது ஏற்படுகின்றது.
இதனை சின்ன சின்ன அறிகுறிகளை வைத்து ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால் தீவிரமாகாமல் இருப்பதுடன், விரைவில் குணமாக மருத்துவரையும் சந்திக்கலாம்.
சிறுநீரக நோய் என்பது வாழ்க்கை முறை, மரபியல் காரணங்களால் ஏற்படலாம் என்றும் உடல் செயல்பாடு, உணவுமுறையைக் கொண்டு இதனை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகின்றது.

அறிகுறிகள் என்ன?
சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டால் உடம்பில் நச்சுக்களும் அதிகமாகிவிடும். இதனால் போதுமான தூக்கம் கிடைத்தாலும் காலையில் உடல் மிகவும் சோர்வாகவே இருக்கும்.
காலை வேளையில் குளித்த பின்பு தோல்களில் அறிப்பு வீக்கம் ஏற்பட்டால் சிறுநீரக கல்லின் அறிகுறியாகும்.

சிறுநீரகத்தில் கல் பிரச்சனை காணப்பட்டால் நுரையீரலில் திரவத்தன்மையும் அதிகரிக்கும். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது. ஆகவே சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டால் சிறுநீரக கல் பிரச்சனையாக இருக்கும்.

காலையில் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை காணப்படுவது, சிறுநீரக கல் பிரச்சனையின் முக்கிய அறிகுறியாகும். வாந்தி மற்றும் குமட்டலும் ஒரு முக்கிய காரணமாகவே இருக்கின்றது.
பாதங்களில் வீக்கம், சிறுநீர் கழிக்கும் போது சிவப்பு அல்லது லேசான ரத்தப்புள்ளிகள் இவையும் சிறுநீரக கல்லின் அறிகுறியாகும்.

எவ்வாறு தடுக்கலாம்?
குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். உணவில் காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சேர்க்கவும்.
சர்க்கரை உப்பு அதிகமாக சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். கீரை, தேநீர், கொட்டை வகைகள், சாக்லேட் இவற்றினை குறைந்த அளவில் உட்கொள்ளவது சிறந்தது.

சிறுநீரக பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் மேற்கொண்டு இதனை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

வழக்கமான உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும். புகைபிடித்தல், மது அருந்துதல், புகையிலை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |