சமந்தா உட்பட பல பிரபலங்களை தாக்கிய ஆட்டோ இம்யூன் கோளாறு பற்றி தெரியுமா?
ஆட்டோ இம்யூன் கோளாறு பிரச்சினையால் திரையுலகில் பிரபலமாக இருக்கும் சல்மான் கான், சமந்தா, நிக்கி ஜோன்ஸ் உள்ளிட்ட பலர் பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நோய் ஏன் பிரபலங்களை மட்டும் தாக்குகின்றது? அதன் அறிகுறி தான் என்ன? நம்முள்ளும் இருக்கின்றதா? என்பதனை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆசை இருக்கும்.
அந்த வகையில் “Autoimmune disorders” என்பது ஒரு மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலம் வேலை என்று பார்த்தால் முதன்மை செயல்பாடு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் என்பவைகளுக்கு எதிராக பேராவதாகும்.
ஆனால் நோயெதிர்ப்பு மண்டலம் வெள்ளை அணுக்களை வைரசுகள் என நினைத்து அழித்து ஆன்டிபாடிகளை தாக்குவதால் “ஆட்டோ இம்யூன்” நோய்கள் ஏற்படுகின்றது.
இதனை தொடர்ந்து “ஆட்டோ இம்யூன்” நோயின் அறிகுறிகளை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பாதிப்புகள்
- ஆட்டோ இம்யூன் கண்டிஷன்ஸ் - டைப் 1 நீரிழிவு நோயில் கணையம் ஆகிய உறுப்புக்களை பாதிக்கின்றது.
- Systemic lupus erythematosus (SLE) அல்லது Lupus ஆகிய பிற ஆட்டோ இம்யூன் கண்டிஷன்ஸ் - முழு உடலிலும் பாதிப்பு ஏற்படும்.
நோயின் அறிகுறிகள்
- தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படும்.
- காய்ச்சல் ஏற்படும்.
- தலைமுடி உதிர்வு மற்றும் தோல்களில் பாதிப்பு ஏற்படல்.
- வாயின் உள்ளே ஒயிட் பேட்ச்சஸ் ஏற்படுதல் எடை இழப்பு ஏற்படல்.
- இன்சோம்னியா, வயிற்று வலி, மலத்தில் ரத்தம் மற்றும் சளி வெளியேறுதல்.
- மார்பு வலி, கை அல்லது கால்களில் கூச்ச உணர்வு இதனால் உடல் வேகமாக களைப்படைதல்.
- குமட்டல், ரேஷ் மற்றும் அரிப்பு, வேகமான அல்லது சீரற்ற ஹார்ட் பீட், பார்வை மங்கலாதல், கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுதல்.