நீரிழிவு நோயால் உங்க கால் அதிகமா வீங்குதா?
தற்போது வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே இருக்கும் மிகப்பெரிய நோய் என்றால் அது நீரிழிவுதான்.
இன்சுலினானது, நமது உடலிலுள்ள குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுகிறது.
அது நடக்க தவறும்பட்சத்தில்தான் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் அதிகப்படியான திரவ சேகரிப்பினால் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது.
இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, புரதச்சத்து, தைரொய்ட் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளால் கால் வீக்கம் ஏற்படலாம்.
அதிக நேரம் நின்று கொண்டிருப்பவர்கள், வயதான பெண்கள், கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் காரணமின்றி ஏற்படும்.
நீரிழிவு நோயாளிகளின் கால் வீக்கத்தை எவ்வாறு தடுக்கலாம்....
உடல் எடை சரியான அளவில் இருக்க வேண்டும்.
உணவில் உப்பின் அளவை சரியான பதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மெக்னீசியம் அளவை பரிசோதனை செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் போன்றவற்றால் கால் வீக்கம் ஏற்படும்.