சக்கரை நோயாளிகள் இனி பயமில்லாமல் இந்த ஸ்வீட்ஸ்களை சாப்பிடலாம்?
பொதுவாகவே இப்போது சக்கரை வியாதி என்ற ஒன்று அனைவருக்கும் பழக்கமாகிவிட்டது. அதுவும் இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்குகிறது.
சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது. சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
இப்படி இனிப்புகளால் ஏற்படும் சக்கரை நோயை இல்லாமல் போக வைத்தியர்கள் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த 6 இனிப்புகளை பயமில்லாமல் சாப்பிடலாம்.
சக்கரை நோயாளிகளுக்கு இனிப்புகள்
1. சக்கரை நோயாளிகள் கிரேக்க தயிர் சாப்பிடலாம். இதில் இருக்கும் புரதச்சத்து பசியை கட்டுப்படுத்தும். மேலும், வைட்டமின் டி, புரோபயோடிக் என்பவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் டைப் 2 சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
2. சத்தான பழக்கங்களில் ஒன்றுதான் ஆப்பிள். இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருக்கிறது. அதனால் தினமும் உணவு உண்ணுவதற்கு முன் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் இரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவு குறையும்.
3. சக்கரை நோயாளிகளுக்கு எதிரி இனிப்புகள் தான் அப்படி அதிக இனிப்பு கொண்ட சாக்லெட்களில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் அதில் இருக்கும் பிளாவனாய்டுகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும்.
4. பேரிக்காய் பழத்தில் 4 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இதனை சக்கரை நோயாளிகள் உண்பதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
5. சியா விதையில் செய்யப்படும் புட்டிங்கிள் நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் என்பன மூலப்பொருட்களாக இருப்பதால் இரத்த சர்க்கரை அளவு மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
6. பொதுவாக வாழைப்பழத்திலும் அதிக சத்துக்கள் இருக்கிறது. அந்த வாழைப்பழத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ்கிறீமில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு இருக்கிறது. இது இரத்த சக்கரை அளவை கணிசமாக குறைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |