சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அல்வாவா? இப்படி செய்து அசத்துங்க
பெரும்பாலும் கடைகளில் வாங்கும் அல்வா மிகவும் சரியான பதத்தில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அது எந்தளவுக்கு சுகாதாரமானது மற்றும் ஆரோக்கியமானது என்பது கேள்விக்குறியே.
வீடுகளிலேயே சிறந்த முறையில் பல்வேறு பொருள்களைக் கொண்டு அல்வா தயார் செய்யலாம்.இது குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
அந்த வகையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பயன்படுத்தி எவ்வாறு அசத்தல் சுவையில் அல்வா செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/4 கிலோ
தண்ணீர் - தேவையான அளவு
வெல்லம் - 1 சிறிய கப்
உப்பு - 1 சிட்டிகை
முந்திரி - சிறிதளவு
நெய் - 4 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றான கழுவி சுத்தம் செய்து ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்து, எடுத்து ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து அதன் தேலை நீக்கிவிட்டு,ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கட்டிகள் இன்றி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கின் விழுதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இனிப்பு சுவைக்கு தேவையான அளவு வெல்லத்தை எடுத்து, அதில் அதை கரைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கிடையில் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் சிறிதளவு உப்பு சேர்த்து, வெல்ல நீரையும் அதில் வடிகட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கலவையை அடுப்பில் வைத்து, உயர் தீயில் நன்றாக கிளறி விடும் போது, கலவையானது கெட்டியாகத் தொடங்கும்.
அதனையடுத்து அதில் முந்திரியை சேர்த்து நன்கு கிளறி விட்டு, நிறம் மாறி அல்வா பதத்திற்கு சுருண்டு வரத் ஆரம்பிக்கும் போது, நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
