அம்மாவை மிஞ்சிய அழகில் நடிகை ஜோதிகாவின் மகள்: என்னம்மா வளர்ந்துட்டாங்க! வைரலாகும் புகைப்படம்
தனது குழந்தைகளுடன் நடிகை ஜோதிகா வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.
திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.
ஆனால், கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா ஜோடி, இதன்பின் இணைந்து நடிக்காமல் இருந்த வருவது, ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
விரைவில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த தம்பதிகளுக்கு தியா, தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதில் தியா ஜோதிகா போன்றும், தேவ் சூர்யா போன்றும் தோற்றமளிக்கின்றனர். இந்நிலையில் தற்போது தனது தாயின் தோளுக்கு மேல் வளர்ந்த மகளுடனும், தனது மகனுடனும் ஜோதிகா வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
