முதல் ஆளாக கேவி ஆனந்துக்கு அஞ்சலி செலுத்த பறந்த சூர்யா! காட்டுத் தீயாய் பரவும் வீடியோ
கேவி ஆனந்தின் மறைவுக்கு முதல் ஆளாக அஞ்சலி செலுத்த நடிகர் சூர்யா அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
விவேக் மற்றும் தாமிரா ஆகியோரின் அடுத்தடுத்து காலமான நிலையில் இன்று மேலும் ஒரு பிரபலம் மறைந்துள்ளது திரையுலகுக்கு பேரழிப்பு தான் என்று கூறவேண்டும்.
இயக்குனர் கே.வி ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சூர்யா அவரது இல்லம் வந்தார்.
— Suriya Fans Army™ᵂᵉᵃʳ ᴹᵃˢᵏ (@Suriyafans_army) April 30, 2021
ஆனால் உடல் இன்னும் இல்லத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்ற தகவலை தொடர்ந்து காரை விட்டு இறங்காமல் மியாட் மருத்துவமனை புறப்பட்டார்.@Suriya_offl #RIPKVAnand pic.twitter.com/gYElU4v8m9
இயக்குநர் கேவி ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா நடித்த அயன், காப்பான், மாற்றம், தனுஷ் நடித்த அனேகன், ஜீவா நடித்த கோ உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கி உள்ளார் .
மேலும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி உள்பட ஒரு சில படங்களை அவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவர் கடைசியாக நடிகர் சூர்யாவை வைத்து காப்பான் திரைப்படத்தி இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.