ஜோடியாக தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்! அசத்தலான வீடியோ
தமிழ் சினிமாவின் முன்னணி ஜோடிகளான சூர்யா -ஜோதிகா இருவரும் இணைந்து தீபாவளி வாழ்த்துக் கூறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா- ஜோதிகா
தமிழ் திரையுலகில் ஒன்றாக பல திரைப்படங்கள் நடித்து, பின்னர் நான்கு வருடங்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் தான் நடிகர் சூர்யா- ஜோதிகா. மேலும் இவர்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சூர்யாவின் படங்கள் தற்போது மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதேபோல் ஜோதிகாவும் தற்போது சமூக கருத்துக்களை கூறும் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர்கள் நடிப்பில் மாத்திரமல்ல திரைப்படங்கள் தயாரிப்பு, அறப்பணிகள் மற்றும் சமூக நோக்கிலான செயல்களில் ஈடுபட்டு வருக்கிறார்கள்.
வாழ்த்து
அந்த வகையில் இன்றைய தினம் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
Happy happy Deepavali dear all! ✨ pic.twitter.com/U8DMRxpx4c
— Suriya Sivakumar (@Suriya_offl) October 24, 2022
மேலும் நடிகர் சூர்யா, கார்த்தி, அவர்களது தங்கை பிருந்தா, ஜோதிகா, கார்த்தியின் மனைவி உள்ளிட்டோருடன் நடிகை ராதிகா சரத்குமாரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தீபாவளியை சிறப்பித்துள்ளனர்.
இந்த வீடியோவை சூர்யா அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.