திருமணத்தில் முத்தமிடும் போட்டோ எங்கே? டிடியின் கேள்விக்கு ஜோதிகா கொடுத்த ஜாலி பதில்!
தென்னிந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகாவுக்கும் முக்கியமான இடம் உண்டு.
திரையில் ஜோடியாக இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தங்களது 20வது திருமண நாளை சூர்யா - ஜோதிகா வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர்.
குழந்தைகள் முன்னிலையில் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டு, தங்களது திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
டிடியின் கேள்வி
இதற்கிடையே, ஜோதிகா வெளியிட்ட புகைப்படப் பதிவின் கீழ் தொகுப்பாளினி டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, “மேம், Now you may kiss the bride போட்டோ எங்கே?” என ஜாலியாக கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஜோதிகா, “எங்களிடம் அந்த போட்டோ இருக்கு. ஆனால் ஷேர் செய்ய மாட்டோம்!” என சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.ஜோதிகாவின் இந்த ஜாலியான பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா, மீண்டும் குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட தருணங்களையும், அதனைச் சுற்றியுள்ள சுவாரஸ்யமான தருணங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
சூர்யா - ஜோதிகாவின் திருமணம் ஸ்காட்லாந்தில் உள்ள பிளேர்குவான் கோட்டையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |