சனி வக்ர நிவர்த்தி: இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிடத்தில் சனி பகவானின் நிலை ஒருவரது வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. சனி ஒரு ராசியில் சுமார் 2½ ஆண்டுகள் பயணிப்பதுடன், அவ்வப்போது வக்ர நிலையில் சஞ்சரிப்பார்.
தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், ஜூலை 27 முதல் வக்ர நிலையில் உள்ளார். இதனால் சில ராசிக்காரர்கள் தடைகள், பிரச்சினைகள் மற்றும் முயற்சிகளில் தாமதங்களை சந்திக்க நேரிடும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

ராகுவின் நட்சத்திர மாற்றம்: 2027 ஏப்ரல் வரை இந்த ராசிகளின் நிதி முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது!
இந்நிலையில், டிசம்பர் 11 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைந்து மீண்டும் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதன் மூலம் இதுவரை சிரமங்களை எதிர்கொண்ட சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி நேர்கதிக்கு திரும்புவதால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பல்வேறு பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
குறிப்பாக வேலை தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வந்து, பணியில் முன்னேற்றத்திற்கான சூழல் உருவாகலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நீண்ட காலமாக பணப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தவர்களுக்கு நிதி நிலை மேம்படும் சூழல் உருவாகலாம்.எதிர்பாராத வகையில் பணவரவு கிடைப்பதுடன், பொருளாதார ரீதியாகவும் நிம்மதி கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்

சனி வக்ர நிவர்த்தி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக வேலை மாற்றம் குறித்து நீண்ட நாட்களாக யோசித்து வந்தவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் மற்றும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு பெறும் வாய்ப்புள்ளது. இதுவரை சந்தித்து வந்த சில பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்ககும்.
மேலும் மன அழுத்தம் குறைந்து, மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதியும் நிம்மதியும் கிடைக்கக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த வேலைகள் மற்றும் முயற்சிகள் இனி தடையின்றி நிறைவேறும் சூழல் உருவாகும்.
பணிபுரிபவர்களுக்கு நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கக்கூடும். அதேபோல், பல்வேறு வழிகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதுடன், அதன் மூலம் நிதி நிலையும் மேம்படும். குறிப்பாக புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் கூடிவரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |