ஹஸ்த நட்சத்திரத்தில் புதன்: இரட்டை ராஜயோகம் பெறப்போகும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகங்களின் இளவரசராகக் கருதப்படுகிறார். தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னியில், சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய ஹஸ்த நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார்.
கன்னியில் புதன் வலிமையான நிலையில் இருப்பதாகவும், ஹஸ்த நட்சத்திர சஞ்சாரம் கூடுதல் பலன்களைத் தரும் என்றும் ஜோதிட ரீதியில் நம்பப்படுகின்றது.புதன் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை ஹஸ்த நட்சத்திரத்தில் நீடிக்கிறார்.

குறித்த புதன் பெயர்ச்சி 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கப்போகின்றது. அப்படி அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

ஜோதிடத்தின்படி, இந்த காலகட்டம் மிதுன ராசிக்காரர்களைத் தொழில்முறை இலக்குகளை நோக்கி வேகமாக முன்னேறச் செய்யும்.
முடிக்கப்படாத பணிகளை நிறைவு செய்வதற்கான சிறந்த காலமாக இது அமையும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதுடன், உங்கள் கடின உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.
ஒரு சிறப்பு நபரின் வருகை உங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் பிரச்சனைகளைத் துணிச்சலுடன் சமாளிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உடல்நிலையும் சிறப்பாக இருக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்துவதன் மூலம் முக்கிய பிரச்சனைகளைத் தீர்த்து, சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.
தொழிலில் நீண்டகாலமாக இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். நிதிநிலை சீராகி, செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். ஒட்டுமொத்தமாக வெற்றியும் அதிர்ஷ்டமும் நிறைந்த காலமாக அமையும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு முதலீடுகள் மற்றும் வணிக வாய்ப்புகள் மூலம் நிதி நன்மைகள் கிடைக்கலாம். வணிகத்தில் இருப்பவர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைத்து, நிதிநிலை மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
நீண்டகால முதலீடுகளுக்கு ஏற்ற காலமாக இது அமையும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கலாம். புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.
உடல்நலம் சிறப்பாக இருப்பதுடன், பெற்றோரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |