ஒரு ஸ்பூன் சீரகம் போதும்.. முகப்பரு, கரும்புள்ளி மாயமாய் மறையும்
பொதுவாக வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களின் மதிப்பு கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை விட அதிகம்.
வழக்கமாக வரும் சிறிய வியாதிகளுக்கு உடனடி தீர்வு சமையலறையில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் உள்ளது.
இதனை வைத்து, நாளாந்தம் வரும் தலைவலி, வயிற்று வலி, இடுப்பு வலி, ஒற்றை தலைவலி, மலச்சிக்கல், உடல் உஷ்ணம் உள்ளிட்ட பிரச்சினைகள் வருவது சாதாரணம் என்பது போன்று அதனை சரிப்படுத்துவதும் இலகுவானது.
இதன்படி, சமையலறையில் இருக்கும் பொருட்களில் ஒன்று தான் சீரகம். இதன் தனித்துவமான மணம் மற்றும் சுவை இவற்றை தவிர அற்புதமான மருத்துவ குணங்களும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சரும ஆரோக்கியத்திற்கு அரு மருந்தாக சீரகம் உள்ளது. சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பருக்கள் மற்றும் பிற சருமப் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கும் நிரந்தர தீர்வு கொடுக்கிறது.
அந்த வகையில், சீரகத்தை வைத்து என்னென்ன மாதிரியான வைத்தியங்களை சருமத்திற்கு கொடுக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. சீரக டோனர் (Toner)
சீரகத்தை வைத்து டோனர் தயாரித்து முகத்திற்கு போடலாம். இது முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் தொற்றுக்களை இல்லாமல் செய்து முகத்தை பராமரிக்கும்.
செய்முறை
ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தை எடுத்து நீரில் போட்டு, நன்றாக கொதிக்க வைக்கவும். சுமாராக 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பின்னர், நீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து முகத்தில் தினமும் டோனராக பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு புத்துணர்வு கொடுக்கும்.
2.சருமத்தை பளபளப்பாக்கும் பேக்
தேவையான பொருட்கள்
- சீரகப் பொடி- ஒரு டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு- ஒரு டீஸ்பூன்
- தயிர்- ஒரு டீஸ்பூன்
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை ஒன்றாக கலந்து, சில நிமிடங்கள் முகத்தில் போட்டு காய வைக்கவும். அதன் பின்னர், முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தொடர்ந்து இந்த பேக்கை போட்டு வந்தால் சருமம் மென்மையாக இருக்கும்.
3. முகப்பருவை இல்லாமல் செய்யும் பேக்
- சீரகப் பொடி- ஒரு டீஸ்பூன்
- மஞ்சள் பொடி- கால் டீஸ்பூன்
- தயிர்- ஒரு டீஸ்பூன்
சீரகப் பொடியுடன் மஞ்சள் பொடி, தயிர் இரண்டையும் கலந்து முகத்தில் முகப்பரு உள்ள இடங்களில் மட்டும் தடவி வர வேண்டும். இந்த பேக்கை 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் படிப்படியாக முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
