Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் கடந்த வாரத்தில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகி உள்ள நிலையில், இதன் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.

சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்துகின்றனர். இதன் Grand Launch கடந்த வாரம் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.
இதன் தற்போதைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் பார்வை மாற்றுத்திறனாளி சிறுவனான சர்வேஷ்வரன் தனது குரலில் போற்றி பாடடி பெண்ணே என்ற தேவர்மகன் பட பாடலை பாடி அசத்தியுள்ளார்.
சிறுவன் சர்வேஷ்வரன் குரலைக் கேட்டு ஒட்டுமொத்த அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்துள்ளது. மேலும் சிறுவன் கோல்டன் ஷவரையும் பெற்றுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |