Super Singer: சூப்பர் சிங்கர் மேடையை ஆட்டம் போட வைத்த சிறுமிகள்... பிரமிப்பில் நடுவர்கள்
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி மற்றும் சாராஸ்ருதி இருவரும் பாடிய பாடல் அரங்கத்தை ஆட்டம் போட வைத்துள்ளது.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் Vibe Songs என்ற தலைப்பில் குழந்தைகள் பாடி வருகின்றனர். இதில் காயத்ரி என்ற சிறுமி கரு கரு கருப்பாயி என்ற பாடலையும், சாராஸ்ருதி தலைகோதும் இளங்காற்று சேதி கொண்டுவரும் என்ற பாடலை பாடி அசத்தியுள்ளனர்.
குறித்த பாடலைக் கேட்ட சக போட்டியாளர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் சக போட்டியாளர்களின் ஆட்டமும் ஹைலைட்டாக இருந்துள்ளது. குறிப்பாக காயத்ரியின் பாடலுக்கு கொடுத்த எக்ஸ்பிரஷன் வேறலெவல் என்று தான் கூற வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
