Super Singer: போரில் தொலைத்த உறவுகள்... இலங்கை சிறுமியின் கண்கலங்க வைத்த பாடல்
பிரபல ரிவியில் நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் சீசன் 11ல் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த சிறுமி ஒருவர் ஈழப்போரில் உறவுகளை தொலைத்த சம்பவத்தை பாடலாக பாடியுள்ளார்.
சூப்பர் சிங்கர் 11
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது 11வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வரும் நிலையில், தற்போது டிசாதனா பாடிய பாடல் மீண்டும் ஈழத்து போரை நமது கண்முன் காட்டியுள்ளது.

20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டுள்ளார். இவரது பெற்றோர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.
இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் அவர் பாடிய பாடல்களால் அரங்கமே கண்ணீர் சிந்தியுள்ளது. ஆம் இலங்கையில் நடந்த போரில் உயிரை விட்டவர்கள் மற்றும் உறவுகளை தொலைத்தவர்களின் கதறலை வெளிக்காட்டியுள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |