அட.. இது சூப்பரா இருக்கே! குக் வித் கோமாளி ஷோவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி சர்ப்ரைஸ்
அனைத்து தொலைக்காட்சி தொடர்களையும் பின்னுக்கு தள்ளி TRP யில் டாப் ரேங்கில் இருக்கிறது குக் வித் கோமாளி. வார இறுதி நாட்களில் விடுமுறைக்காக காத்திருப்பவர்களை விட, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக காத்திருப்பவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.
எதிர்மறையான விமர்சனங்களே இல்லாமல், நேர்மறையாக மட்டுமே நிகழ்ச்சிகளை கொண்டு செல்வதில் குக் வித் கோமாளி டீம் கில்லி தான். தற்போது இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், Wild Card Entryக்கான போட்டி நடந்து வருகிறது.

இதில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கள் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள நிலையில், 4வது பைனலிஸ்டாக நடிகை ஷகிலா தேர்வானார். இந்நிலையில் 5வது பைனலிஸ்டாக ஒருவர் சேர்ந்துள்ளாராம், அது வேறு யாருமில்லை... பவித்ரா தானாம்.
இதுவரையிலும் நான்கு பைனலிஸ்டுகளை வைத்து மட்டுமே நிகழ்ச்சி நடந்த நிலையில், தற்போது ஐந்து பேர் களத்தில் இருக்கின்றனர்!!! இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றார்களாம்!!!