கொலை மிரட்டல்கள்- கேன்ஸ் படவிழாவில் சன்னி லியோன் உருக்கமான பேச்சு
என்னை அவமானப்படுத்தி கொலை மிரட்டல்கள் விடுத்தனர் என்று கேன்ஸ் படவிழாவில் சன்னி லியோன் உருக்கமாக பேசியுள்ளார்.
கேன்ஸ் பட விழாவில் சன்னி லியோன்
தற்போது பிரான்ஸில் 76வது புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மொத்தம் 21 திரைப்படங்கள் போட்டிபோடுகின்றன. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
இவ்விழாவில் வருகை தரும் நடிகர், நடிகைகளுக்கு சிறப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கப்படும்.
நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், குஷ்பு, இயக்குநர் விக்னேஷ் சிவன் உட்பட பல ஏராளமான இந்திய நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விழாவிற்கு நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். இவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
@PratyushBarik03
சன்னி லியோன் உருக்கமான பேச்சு
இதனையடுத்து, இந்நிகழ்ச்சி மேடையில் நடிகை சன்னி லியோன் தான் கடந்து வந்த பாதையை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில்,
ஆபாசத்துறையிலிருந்து சினிமாத்துறையில் நான் மாறிய ஆரம்பக் காலக்கட்டத்தில் நிறைய அவமானங்களை சந்தித்தேன். எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்தது. என் கூட முன்னணி நடிகர்கள் நடிக்க மறுத்துவிட்டனர். ஆனால், என் கணவர் டேனியல் வெப்பர் முழு ஆதரவு கொடுத்தார். நான் டேனியல் வெப்பரை காதலித்தபோது, மற்ற ஆண்களுடன் நடிக்க மறுத்தேன்.
எனக்காகத்தான் டேனியல் ஆபாசத்துறையில் நுழைந்தார். அதன் பிறகுதான் நாங்கள் இருவரும் ஆபாசத்துறையில் இணைந்து நடிக்க ஆரம்பித்தோம். நாங்கள் இருவரும் முதல்முறையாக வேகாஸில் சந்தித்தோம். அப்போவே எனக்கு இவரை பிடித்து விட்டது. நாங்கள் நிறைய பேசினோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம்.
@PratyushBarik03
இவரை சந்தித்த பிறகு 3 மாதத்திலேயே என் அம்மா இறந்து விட்டார். அப்போது எனக்கு இவர் தான் ஆதரவாக இருந்தார். என் வாழ்க்கையில் நான் அனுபவித்த பல பிரச்சினைகளில் எனக்கு இவர் தான் கூட இருந்தார். ஆனால், இன்று என் கடின உழைப்பால், பல விமர்சனங்களையும் தாண்டி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளேன் என்று உருக்கமாக பேசினார்.
Sunny Leone attends the "Kennedy" red carpet during the 76th annual Cannes film festival at Palais des Festivals on May 24, 2023 in Cannes, France.#SunnyLeone #Cannes2023 #CannesFilmFestival #Cannes #Kennedy #KennedyAtCannes #Bollywood #India #Hollywood #France #KateWinslet pic.twitter.com/nKISicooKq
— Pratyush Barik (@PratyushBarik03) May 25, 2023
Sunny Leone attends the "Kennedy" red carpet during the 76th annual Cannes film festival at Palais des Festivals on May 24, 2023 in Cannes, France.#SunnyLeone #Cannes2023 #CannesFilmFestival #Cannes #Kennedy #KennedyAtCannes #Bollywood #India #Hollywood #France pic.twitter.com/XXgl4dPEuu
— Pratyush Barik (@PratyushBarik03) May 25, 2023