கேன்ஸ் பட விழா : கோட் சூட்டில் மாஸ் காட்டிய விக்னேஷ் சிவன் - வைரலாகும் வீடியோ
கேன்ஸ் பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் கோட் சூட்டில் மாஸ் காட்டிய விக்னேஷ் சிவனின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கேன்ஸ் திரைப்பட விழா
தற்போது, பிரான்ஸில் 76வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 21 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. இந்த விழாவை சிறப்பிக்க உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும் இவ்விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அழகு சிலையாய் வந்த ஐஸ்வர்யா, குஷ்பு
சமீபத்தில் இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார். கருப்பு நிற கவுனுடன், பெரிய சில்வர் பேட்டை ஏந்தி வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தார். அதேபோல், நடிகையும், தேசிய மகளிர் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் புடவையை உடுத்தி செம்பு சிலைப்போல் ஒய்யாரமாக போஸ் கொடுத்தார்.
@moviesndtv
கோட் சூட்டில் மாஸ் காட்டிய விக்னேஷ் சிவன்
இந்நிலையில், இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
இவ்விழாவில் இவருக்கு சிறப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கப்பட்டார். கருப்பு மற்றும் வெள்ளை கோட், சூட்டில் மாஸாக நடந்து வந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Producer, Director, Lyricist and Feature Hero @VigneshShivN of @Rowdy_Pictures at #CannesFilmFestival #Candid Clicks@NayantharaU #Nayanthara #VigneshShivan pic.twitter.com/7AJfbBGBdU
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 22, 2023
Producer, Director, Lyricist and Feature Hero @VigneshShivN of @Rowdy_Pictures at #CannesFilmFestival #Candid Clicks@NayantharaU #Nayanthara #VigneshShivan pic.twitter.com/VjUuRWVhdS
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 22, 2023