நீங்க ஞாயிற்றுக்கிழமை பிறந்தவரா? அப்போ நீங்க அதிபுத்திசாலியாக இருப்பீங்க.. பிறப்பின் அர்த்தம்
பொதுவாக ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் ஆளுமை கொண்டவர்களாக காணப்படுவார்கள்.
அதே போன்று ஒவ்வொரு கிழமைகளில் பிறந்தவர்களும் அதன் நேரம் மற்றும் கிரக மாற்றத்திற்கமைய ஒவ்வொரு திறமைகளை கொண்டிருப்பார்கள். அவர்களின் ஆளுமைகளும் வித்தியாசமாக இருக்கும்.
வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் இயற்கையிலேயே தலைமைத்துவ குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த நாளில் பிறந்தவர்கள் மீது கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் கூடுதல் அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் ஞாயிற்றுகிழமை பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் பலம் மற்றும் பலவீனம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை பிறப்பவர்கள்
1. சூரிய பகவான் அவர்களின் ஆளும் தெய்வமாக இருப்பார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கங்கள் அதிகமாக இருக்கும்.
2. ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை மற்றும் பழக்கவழக்கங்கள் மற்ற நாட்களில் பிறந்தவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இவர்கள் வழக்கத்திற்கு மாறாக கடின உழைப்பாளிகள், லட்சியவாதிகள் மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் எதையும் தைரியமாக பேசும் சூழ்நிலை இருக்கும்.
3. வசீகரமான தோற்றமுடையவராக ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் இருப்பார்கள். பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் இவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
4. மற்ற கிழமையில் பிறந்தவர்களை விட இந்த கிழமை பிறந்தவர்கள் நம்பிக்கை கொண்டவராக இருப்பார்கள். எந்த விடயத்தையும் சரியாக பேசுவார்கள். இவர்களின் ஆழமான சிந்தனைகள் மற்றவர்களிடம் இருந்து இவர்களை பேறுப்படுத்திக் காட்டும். சுயமரியாதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
5. வலுவான ஆளுமை, படைப்பாற்றல், லட்சிய உணர்வு மற்றும் வலுவான மன உறுதி போன்றவற்றால் வேறுப்படுத்திக் காட்டப்படுவார்கள். மிகவும் ஒழுக்கமானவர்களாக இருக்கும் இவர்களுக்கு தலைமைத்துவம் கிடைப்பது இலகுவாக இருக்கும். வீட்டில் கடுமையான விதிமுறைகள் வைத்து மற்றவர்களை நிர்வகிப்பார்கள்.
6. அரசுத் துறையிலோ அல்லது நிர்வாகத்திலோ சிறப்பாக பணிபுரிவார்கள். இது தவிர அவர்கள் மருத்துவம், எரிசக்தித் துறையில், அரசியல், மென்பொருள் பொறியாளர், காவல்துறை, நாடகம் அல்லது திரைப்பட இயக்குநர் போன்ற சிறப்பான தொழில் வாய்ப்புக்கள் இவர்களை சுற்றியிருக்கும். அதிலும் குறிப்பாக ஞாயிறு பிறந்தவர்கள் இயந்திரவியல் துறையில் முதலாளிகளாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |