நம்பவே முடியல.. சுந்தரபாண்டியன் பட இளம் மதியா இப்போ இப்படி மாறிட்டாங்க
“சுந்தரபாண்டியன்” படத்தில் லக்ஷ்மி மேனன் உடன் வரும் நடிகையின் தற்போதைய விவரங்கள் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சுந்தரபாண்டியன்
கடந்த 2012-ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சுந்தரபாண்டியன் இந்த திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருப்பார்.
நடிகை லக்ஷ்மி மேனன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அத்துடன் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்தார். சசிக்குமார் நடிப்பில் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கிராமத்து கதையில் நண்பர்களுக்குள் நிகழும் துரோகத்தை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்பட்டுள்ளது.
படத்தின் நகைச்சுவை காட்சிகளும், பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
படத்தில் வரும இளம் மதியா இவர்?
இந்த நிலையில், லக்ஷ்மி மேனன் உடன் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகையும் அப்போது பிரபலமாக இருந்தார். சிறிய வசனங்கள் மற்றும் காட்சிகளில் வந்திருந்தாலும் டைமிங் வசனங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
படத்தில் “இளம் மதி” என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் உண்மையான பெயர் நீத்து நீலாம்பரன் ஆகும். கேரளாவைச் சேர்ந்த இவருக்கு சுந்தரபாண்டியன் படத்துக்குப் பிறகு பெரிய அளவில் கோலிவுட்டில் பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.
நீத்து நீலாம்பரனின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
“கேரளத்து உடையில், ஆளே மாறியிருக்கிறார்..” என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |