நாவில் எச்சில் ஊறவைக்கும் வைச மீன் குழம்பு.... வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம்!
பொதுவாகவே அசைவ பிரியர்களுடன் ஒப்பிடுகையில் சைவம் உண்பவர்களுக்கு உணவு வகைகள் குறைவாகவே இருக்கும். அதனால் இவர்கள் ருசியான உணவுகளை அணுபவிக்க முடியாத நிலை காணப்படுப்படுகின்றது.
ஆனால் முறையாக சமைத்தால் சைவ உணவுகளை அசைவ உணவுகளே தோற்றுப்போகும் அளவுக்கு அசத்தல் சுவையில் செய்ய முடியும். அப்படி மீன் குழப்பை மிஞ்சிய சுவையில் எவ்வாறு சைவ மீன் குழம்பு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1
சின்ன வெங்காயம் - 200கிராம்
தக்காளி - 2
பூண்டு பல் - 8
மஞ்சள் தூள் - 2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக் கரண்டி
மல்லித்தூள் - 1 மேசைக் கரண்டி
தேங்காய் பால் - 50 மில்லி
புளி - 1 எலுமிச்சை அளவு
கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
வறுத்து அரைக்க தேவையானவை
மிளகு - அரை தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
வெந்தயம் - 1
தேக்கரண்டி தனியா - 1
தேக்கரண்டி கடைலப் பருப்பு - 1 தே.கரண்டி
தாளிக்க
கடுகு - தே.கரண்டி
சீரகம் - தே.கரண்டி
வெந்தயம் -தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - தே.கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் வாழைக்காயை நீளவாக்கில் நறுக்கி சிறிது மிளகாய்த் தூள், உப்பு கலந்து எண்ணெயில் பொரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு கப் தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊறவிட்டு நன்றாக கரைத்து வடிக்கட்டி, எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வறுக்க கொடுத்துள்ள மிளகு, சீரகம், வெந்தயம், தனியா, கடலைப் பருப்பு ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வாசனை வரும் அளவுக்கு நன்கு வறுத்து பொடிசெய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்பு வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து மென்மையாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மிளகாய் தூள், தனியாத்தூள் சேர்த்து, அதனுடன் பொடியாக்கி வைத்துள்ள தூளையும் சேர்த்து விடவும். இந்த கலவையில் இப்போது புளித் தண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
கொதிக்கும் போது அதில் தேங்காய் பாலையும் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு, நல்ல கொதி வந்ததும் குழம்பில் பொறித்த வாழைக் காய்களை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து. தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழைக்காய் வெந்ததும், கொத்தமல்லியை தூவி இறக்கினால் அவ்வளவு தான், சுவையான சைவ மீன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |