பேசவே முடியாத அளவிற்கு நடிகர் விஷாலுக்கு நேர்ந்தது என்ன? அதிருப்தியில் திரையுலகம்
12 ஆண்டுகளுக்கு பிறகு மத கஜ ராஜா படம் திரைக்கு வரும் நிலையில் இந்தப் படத்தின் பிரஸ் மீட் நேற்றைய தினம் நடைபெற்றது.
மதகஜராஜா
கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு எடுக்கப்பட்ட படம் மத கஜ ராஜா. இந்த படம் 2013 ஆம் ஆண்டு திரைக்கு வர இருந்தது. ஆனால் சில பிரச்சனை காரணமாக இது 12 காலமாக எந்த அறிவிப்பும் இருக்கவில்லை.
இந்த படம் இயக்குநர் சுந்தர் சி இயக்கிய படம். இந்தப் படத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தானம், அஞ்சலி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இது தவிர இதில் மத கஜ ராஜா படம் திரைக்கு வரும் நிலையில் இந்தப் படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில், சுந்தர் சி, விஷால், விஜய் ஆண்டனி, குஷ்பு ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இதன்போது சுந்தர் சி சில விடயங்களை கூறியிருந்தார்.
இதன்போது இந்த பிரஸ் மீட்டில் நடிகர் விஷாலும் கலந்துகொண்டுள்ளார். இந்த படத்தில் மீட்டில் கலந்துகொண்ட விஷால் உடல் மெலிந்த நிலையில் கை நடுங்கியபடி நின்று பேசியுள்ளார்.
அப்போது படக்குழுவினர் அவரை உட்காந்து பேசுமாறு அறிவுறுத்தினர். அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட இந்தப் படத்தின் பிரஸ் மீட்டிற்கு வந்திருக்கிறார். அதோடு குளிர் காரணமாக அவர் நடுங்கியிருக்கிறார் என்ற படக்குழு விளக்கம் கொடுத்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |