குட்நியூஸ் சொன்ன நடிகை சுனைனா- வருங்கால கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை சுனைனா துபாய் யூடியூபருடன் மோதிரம் மாற்றிக் கொண்டதாக செய்தி வெளியாகிய நிலையில், தற்போது இருவரும் கைக்கோர்த்து குட்நியூஸ் சொன்ன பதிவு இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
நடிகை சுனைனா
தமிழ் சினிமாவில் “காதலில் விழுந்தேன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை சுனைனா.
இதனை தொடர்ந்து மாசிலாமணி, தெறி, சமர், நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகையாக பார்க்கப்படுகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுனைனா தன்னுடைய திருமணம் குறித்து அறிவிருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து மாப்பிள்ளை யார் யார் என நெட்டிசன்கள் தேடிக் கொண்டிருந்த வேளையில் புது தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதாவது, துபாயை சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி தான் சுனைனா சிம்பிளாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் அவர்களின் திருமண மோதிர புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் காலித் அல் அமேரி சுனைனாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து, இணையவாசிகளுக்கு இருந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
யார் இந்த காலித் அல் அமேரி?
ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) சேர்ந்த பிரபலமான யூடியூப்பராக பார்க்கப்படும் காலித் அல் அமேரி, நகைச்சுவையாளர், தொழில்முனைவோர் மற்றும் Stanford பல்கலைக்கழக பட்டதாரி என பன்முகம் கொண்டவர்.

தனது வாழ்க்கையில் நிகழும் நகைச்சுவையான நிகழ்வுகளையும், பயணங்களின் போது எடுக்கப்படும் காணொளிகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர்.
துபாயில் பிரபலமாக யூடியூப்பராக இருக்கும் இவர், ஏற்கனவே திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னரே சுனைனாவுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இர்பானுடன் இணைந்து காலித் அல் அமேரி போட்ட காணொளி தமிழ்நாட்டிலும் காலித் அல் அமேரியை பிரபலமாக்கியுள்ளது.
தற்போது காலித் அல் அமேரி பெயரில் 44 கோடிகள் வரை சொத்துக்கள் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |