என்னது கேன்சரா? ஷோவில் கதறி அழுத நடிகை திவ்யா- ஆறுதல் கூற முடியாத நிலையில் சக நடிகர்கள்
என்னது கேன்சரா? கதறி அழுத நடிகை திவ்யா ஸ்ரீதரின் காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
காதல் திருமணம்
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் சீரியல்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா ஸ்ரீதர்.
இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வந்த திவ்யா, அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்திற்கு திவ்யாவின் வீட்டில் பெரியளவில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் சிறிதுக்காலம் சென்றும் தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யா கணவர் அர்ணவ்விடம் கூறியிருக்கிறார். அர்ணவ் “குழந்தை வேண்டாம் ” என கோபமுற்று அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் பல வாக்குவாதங்கள் சென்றுக் கொண்டிருந்தன. குழந்தையும் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இருவரும் விவாகரத்து பெறவில்லை, பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
சக நடிகர்களை வாயடைக்க வைத்த காணொளி
இப்படியொரு சமயத்தில் சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா நிகழ்ச்சியொன்றில் அம்மாவுக்கு கேன்சர் வந்து விட்டதாகவும், அதனை வெளியில் காட்டாமல் எப்படி சமாளிக்கிறார் என்பதை கருவாக வைத்து நடித்து காட்டியுள்ளார்.
இவரின் திறமை சக நடிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. அத்துடன் அங்கிருந்தவர்களும் கண்கலங்கி அழ ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “இவ்வளவு திறமையா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |