செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், தலைமைத்துவம், தன்னம்பிக்கை, அந்தஸ்து ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுகிறார்.
அவரது நிலை மாறும்போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். தற்போது சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில், ஏற்கனவே அங்கு இருக்கும் கேதுவுடன் இணைந்து பயணித்து வருகிறார்.இதனால் சில ராசிக்காரர்கள் பணியில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம்.

இந்நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் புதனின் ஆளுகைக்குட்பட்ட கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.இதன் மூலம் சூரியன் கேதுவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, தொழிலில் சந்தித்து வந்த சிக்கல்களில் இருந்து சில ராசிக்காரர்கள் மீளப்போகின்றது.
சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 11-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது வருமானம், லாபம் மற்றும் ஆசைகள் நிறைவேறுவதற்கு வழிவகுக்கும்.
எனவே, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வணிகத் தொடர்புகள் மூலம் நிதி ஆதாயங்களும் கிடைக்கலாம். நீண்ட காலமாக புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், இக்காலம் அதற்கு ஏற்றதாக இருக்கும்.
பணிபுரிபவர்கள் அலுவலகப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, வருமான உயர்வைப் பெறலாம். இதனால் பணப் பிரச்சனைகள் குறையும். நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தானாக அமையும்.
தனுசு

தனுசு ராசியின் 10-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது வேலை, தொழில், நற்பெயர் மற்றும் பணியிடத்தைக் குறிக்கும் வீடாகும்.
இதனால் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட கால கடின உழைப்புக்குப் பலன் கிடைப்பதுடன், பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக அமையும். வேலை மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கும் சாதகமான செய்திகள் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |