கடகத்தில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல் வாய்ந்த கிரகங்களின் இணைவால் உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், 2026 செப்டம்பர் 18 அன்று கடக ராசியில் நுழைந்து, நவம்பர் 12 வரை அங்கு சஞ்சரிக்கின்றார்.

நெருப்பு கிரகமான செவ்வாய், நீர் ராசியான கடகத்தில் நுழைவது 2026-ன் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாகும். ஏற்கனவே குருபகவான் கடக ராசியில், தனது உச்ச நிலையில் சஞ்சரித்து வருகிறார். ஜூன் 2 முதல் அக்டோபர் 31, 2026 வரை குரு கடகத்தில் இருப்பார்.
இதனால் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 31 வரை செவ்வாய்–குரு இணைவு ஏற்பட்டு குரு மங்கள யோகம் உருவாகிறது. இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் ஆதிக்கம் செலுத்தினாலும் சில ராசிக்காரர்களுக்கு அதிகளவில் சாதகமான பலன்களை வழங்கும்.
அப்படி குரு மங்கள யோகத்தால் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

செவ்வாய் இந்த காலகட்டத்தில் வீடு, சொத்து மற்றும் குடும்ப வாழ்க்கையைக் குறிக்கும் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறது. இதனால் பல்வேறு துறைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
இருப்பினும் அதற்கு கடின உழைப்பும் முயற்சியும் தேவைப்படும். உங்கள் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். புதிதாக ஏதாவது தொடங்க, குறிப்பாக வியாபாரம் தொடங்க இது சிறந்த காலமாக இருக்கும்.
நிதி நிலை சாதகமாக இருப்பதுடன், முதலீடுகளும் நல்ல பலனைத் தரலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பணியிடத்திலும் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
கடகம்

குருபகவான் ஏற்கனவே கடக ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், தற்போது செவ்வாயும் இணைகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த கிரக சேர்க்கை வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
பல்வேறு விஷயங்களில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். குறிப்பாக சட்டம் தொடர்பான பிரச்சினைகளில் நிவாரணம் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபமும், பணியாளர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான பலன்களும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் நிலவும்.
நீங்கள் மேற்கொண்டு வரும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.காதல் மற்றும் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு மங்கள யோகம் எதிர்பாராத நன்மைகளைத் தரக்கூடும். செவ்வாய் ஆர்வத்தையும் செயல்திறனையும் அதிகரிக்க, குருபகவான் தன்னம்பிக்கையை கொடுப்பார்.
இதனால் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதுடன், புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும்.
முதலீடுகளிலிருந்தும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்புகள் உருவாகும்.வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |