தங்க நிற புடவையில் அசத்தல் போஸ் கொடுத்த ஆல்யா மானசா... குவியும் லைக்குகள்!
சீரியல் நடிகை ஆல்யா மானசா தங்க நிற புடவையில் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவரும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை வென்ற முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட மூலம் மீடியா உலகில் அறிமுகமான அவர், தனது திறமையால் ரசிகர்களின் கவனத்தை விரைவில் ஈர்த்தார்.

அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார். அந்த தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.

ரசிகர்களின் விருப்ப ஜோடியாக திகழும் இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஆல்யா மானசாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சீரியல்களைத் தாண்டி விளம்பரங்கள், தனியார் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு மேடைகளிலும் ஆல்யா மானசா தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஆல்யா மானசா தங்க நிற புடவையில் அழகிய ஆபரணங்களுடன் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகியுள்ளதுடன் லைக்குகளையும் அள்ளி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |