பிப்ரவரியில் சூரியனின் திரிகோண பெயர்ச்சி - புதிய வாழ்க்கையில் காலடி பதிக்கப்போகும் ராசிகள்
சூரியன் பிப்ரவரி மாதத்தில் ஒரே நேரத்தில் மூன்று முறை தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இதனால் பல ராசிகள் நற்பயனை பெறப்போகின்றது.
சூரிய பெயர்ச்சி 2026
ஜோதிடத்தில் சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக அறியப்படுகிறார். இவர் மாசி மாதத்தில் மூன்று முறை தனது நிலையை மாற்ற போகிறார்.
பிப். 6-ல் அவிட்ட நட்சத்திரத்தில் நுழையும் சூரியன் பின்னர் பிப்ரவரி 13-ல் கும்ப ராசியில் நுழைகிறார். இறுதியாக பிப்ரவரி 19 ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார்.
சூரியனின் இந்த பெயர்ச்சி சில ராசிகள் வாழ்க்கையில் நல்ல புதிய மாற்றத்தை கொண்டு வரும். அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

ரிஷபம்
- ரிஷப ராசிக்கு சூரியனின் சஞ்சாரம் தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றத்தை தரும்.
- வேலை மாற நினைப்பவர்களுக்கு இது சரியான நேரமாகும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.
- வியாபாரிகள் நல்ல லாபம் காண்பர். புதிய தொழில்களை தொடங்கவும் இது நல்ல நேரமாகும்.
தனுசு
- தனுசு ராசிக்கு இந்த சூரிய சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும்.
- ஆற்றலும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சாதகமாக மாறும்.
- எடுக்கும் காரியங்கள் விரைவில் முடியும். உறவுகள் வலுப்பெறும்.
- குழப்பத்தை தவிர்த்து தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.
- ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
- கும்ப ராசியில் சூரியன் இருப்பதால் பல நன்மைகள் உண்டாகும்.
- திடீர் பண வரவு, அந்தஸ்து, மரியாதை உயரும். தன்னம்பிக்கை வலுப்பெறும்.
- பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.
- நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
- நாள்பட்ட நோய்களில் இருந்து நிரந்தரமாக நிவாரணம் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).