அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களின் பட்டியலில், தைராய்டு புற்றுநோய் முக்கிய இடம் வகிக்கின்றது. தைராய்டு சுரப்பி எனப்படுவது, கழுத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும்.
இது உடலின் வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம் இதயத் துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

தைராய்டு சுருப்பிகளில் ஏற்படும் கட்டி, தைராய்டு புற்றுநோய் எனப்படுகிறது. உயிர் பிழைப்பு விகிதம் அதிகமாக உள்ள, எளிதில் சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாக அறியப்படும் இந்த புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது மிகவும் சவாலானதாகவே இருக்கும்.
குறித்த புற்றுநோய் மெதுவாக வளரும் தன்மை கொண்டது என்பதால், ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்த முடியும்.மாறாக இதை இறுதிக்கட்டத்தில் கண்டறியும் பட்சத்தில் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.

அந்தவகையில், ஒருபோதும் புறக்கணிக்கவே கூடாத தைராய்டு புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
தொடர்ச்சியான தொண்ட கரகரப்பு: புகைத்தல், தொற்றுநோய்கள் என எந்தவித காரணமும் இல்லாமல் தொடர்ச்சியான இருமல் அல்லது தொண்டை கரகரப்பை உணர்ந்தால், அவசியம் மருத்துவ பரிசோதனையை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
இது தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளில் மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நம்முடைய குரல் நாண்கள் தைராய்டு சுரப்பியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால், புற்றுநோய் கட்டிகள் குரல் நாண்களை அழுத்தி குரல் கரகரப்பை ஏற்படுத்தும்.

கழுத்தில் வலியின்றிய கட்டி அல்லது வீக்கம்: தைராய்டு புற்றுநோயின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக கழுத்தில் கட்டி அல்லது வீக்கம் ஏற்படுவது குறிப்பிடப்படுகின்றது.
இந்த அறிகுறிகள் பொதுவாக வலியை ஏற்ப்படுத்துவது கிடையாது என்பதால், பலரும் இதனை புறக்கணித்துவிடுகின்றனர்.
ஆனால் இது தைராய்டு புற்றுநோயின் புறக்கணிக்கவே கூடாத முக்கிய அறிகுறியாக அறியப்படுகின்றது.
தைராய்டு கட்டிகள் வளர்ந்து மூச்சுக் குழாயை அழுத்தும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். மேலும் அவை வளர்ந்து சுற்றியுள்ள திசுக்களை அழுத்தி கழுத்தில் அதிக வலி ஏற்படும்.

விழுங்குவதில் சிரமம்: தைராய்டு சுரப்பியில் ஏற்படும் வலியற்ற கட்டிகள் பெரிதாகும் போது அல்லது கட்டி உணவுக்குழாயை அழுத்தும் போது, விழுங்குவதில் சிக்கல் நிலை உருவாகும். பலர் வலி இல்லாவிட்டாலும், தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டது போன்ற உணர்வை தொடர்ந்தும் உணர்வார்கள் இது குறித்து மருத்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
சுவாசிகப்பதில் சிரமம் : தைராய்டு கட்டிகள் வளர்ந்து மூச்சுக் குழாயை அழுத்தும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். மேலும் அவை வளர்ந்து சுற்றியுள்ள திசுக்களை அழுத்தி கழுத்தில் அதிக வலியையும் ஏற்படுத்தக்கூடும்.

கழுத்து அல்லது தொண்டை வலி: தொற்று அல்லது காயம் இல்லாமல் தொடர்ந்தும் கழுத்து அல்லது தொண்டை வலியை அனுபவிக்கின்றீர்கள் என்றால் நிச்சயம் இது குறித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
தைராய்டு தொடர்பான வலி சில நேரங்களில் காதுகளுக்கும் பரவக்கூடும். இது பல் அல்லது காது,மூக்கு மற்றும் தொண்டை பிரச்சனை என்று சிலர் அதனை நீண்ட காலத்துக்கு புறக்கணிப்பதால், தைராய்டு புற்றுநோய் இறுதி கட்டத்தை எட்டிவிடும்.
அதன் பின்னர் சிகிச்சையளிக்கவே முடியாத நிலை கூட ஏற்படலாம். எனவே இது குறி்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |