ஒரு வருடம் கழித்து வரும் சக்திவாய்ந்த ராஜயோகம்- பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னுடைய ராசி மாற்றும்.
இதன் தாக்கம் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் இருக்கும். ஒருவரின் திருமணம், கல்வி, வியாபாரம், புதிய தொழில் உட்பட வாழ்க்கையில் நடக்கும் அனைத்திலும் பெயர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தும்
அந்த வகையில், கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது நிலையில் இருந்து மாற்றங்களை ஏற்படுத்துவார். அப்படி சூரியன் நிலை மாற்றத்தால் தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
இதன்படி, எதிர்வரும் 2025 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்லவுள்ளார். மேஷ ராசியில் சூரியன் நுழைவதால் முதல் தமிழ் மாதமான சித்திரை பிறக்கிறது.
மேஷ ராசியில் புதன் மற்றும் சூரியன் சேர்க்கையால் “புதாதித்ய ராஜயோகம்” உருவாகவுள்ளது. இந்த சக்தி வாய்ந்த ராஜயோகத்தால், சில ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களை பெறவுள்ளனர்.
அப்படியாயின், மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன்- புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இவர்கள் வருமானத்தில் உயர்வு காண்பார்கள்.
பல வழிகளில் நிறைய பணம் சம்பாதித்து வாய்ப்பை பெறுவார்கள். சூரியன் அருளால் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு வரவுள்ளது.
செல்வம் பெருகுவதால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் அதிகம் வரும். அலுவலகத்தில் பதிவி உயர்வு வரும். சம்பளம் உயர்வு நீண்ட காலத்திற்கு பின்னர் வரும். ஏனைய முதலீடுகளில் இருந்து லாபம் வரவும் வாய்ப்பு உள்ளது.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன்- சூரியன் சேர்க்கை புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளது. இதன் விளைவாக திடீர் நிதி ஆதாயங்கள் வரும்.
வேலைச் செய்யும் இடத்தில் வழக்கத்திற்கு மாறாக மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் முக்கிய வேலைகளை வெற்றிகர செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்களிடம் சிக்கிய பணம் மீண்டும் பெற வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன்- புதன் சேர்க்கை புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளது. இதனால் வருமான உயர்வும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியை காண்பார்கள்.
வேலைச் செய்யும் இடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படுவதால் குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு சிறப்பாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |