காயங்களை கட்டி வைக்கலாமா? திறந்து வைக்கலாமா? பாட்டி வைத்தியத்தில் தீர்வு
வழக்கமாக நமது உடலில் ஏதாவது காயங்கள் ஏற்பட்டால், உடனே அதற்கு மருந்து போட்டு கட்டி விடுவார்கள். இது சரியா? தவறா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
காயம் ,சாதாரண புண், அடிபட்டு தையல் போட்ட இடத்தில் தொற்றுக்கள் உள்ளே செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதுவும் மேல் புறம் தோலில் இருப்பதால் அடுத்த தோலுக்கு செல்லும் முன்னர் ஆற்ற முயற்சிகள் செய்வார்கள். மேல்தோல், நடுத்தோல் மற்றும் அடித்தோல் என மூன்று அமைப்புக்கள் உள்ளன.
அதில், மேலோட்டமான காயம் ஏற்பட்டால் வெறும் மேல் தோல் கிழிந்து காயம் ஆகியிருக்கிறது, உதாரணத்திற்கு- சுடுதண்ணீர் உடம்பில் கொட்டியவுடன் ஏற்படும் காயம் அது மேல் தோலில் தான் ஏற்படுகிறது. அதனை மூடி கட்டி வைப்பது சிறந்தது.
சில புண்களிலிருந்து சீழ், ரத்தம், நீர் போன்றவை வடிவதுண்டு. இம்மாதிரி ரணங்களை மூடி வைப்பார்கள். ஏனெனின் சிறிய காயங்கள், கீறல்கள், சிராய்ப்புகள் போன்றவற்றுக்கு தினமும் மருந்து தடவி மூடாமல் விட்டுவிட்டால் சீக்கிரம் ஆறி விடும். ஆனால் காயங்களில் அழுக்கு, தூசி படாமல், துணி உரசாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
விபத்தினால் ஏற்பட்ட மேலோட்டமான காயங்கள், செல்லப்பிராணிகள், காட்டு விலங்குகள் கடித்ததினால் ஏற்பட்ட காயங்களை மூடி வைப்பது வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் அதனை திறந்து வைத்து மருந்து போடுவது நல்லது.
கடுமையான தீப்புண்களில் கிருமிகள் சுத்தமாக நீக்கப்பட்ட பேண்டேஜ் கொண்டு மூடிவைப்பது நல்லது. ஆழமான காயங்களை கிருமிநாசினி சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் நன்கு பலமுறை கழுவி பின் பாக்டீரியா எதிர்ப்பு ஆயின்ட்மென்டை தடவி சுத்தமான பேண்டேஜ் வைத்து கட்டு கட்டி வைப்பது சிறந்தது.
மருந்து தடவி பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்கும். தூசி அழுக்கு படாமலும் கிருமிகள் உள்ளே நுழையாமலும் இருக்கும். காயம் மேல்தோல், நடுத்தோல், அடித்தோல் தாண்டி மிக ஆழமாக தசைகளுக்கு போய்விட்டிருந்தால் கட்டு போட்டு பாதுகாப்பது நோயாளியின் கடமை என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
புண்கள் ஏற்பட்டால் அதனை சில நாட்டு வைத்தியங்கள் செய்து இலகுவாக ஆற்றலாம். அப்படியாயின், புண்களை சீக்கிரம் ஆற்றும் பாட்டி வைத்தியங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து எமது பதிவில் காணலாம்.
பாட்டி வைத்தியங்கள்
1. அத்திமர காய்
ஆறாத ரணங்கள் இருந்தால் அத்திமரத்தின் காய், இலை, பட்டை சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. அத்திமரப்பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி, ஒரு கைப்பிடி எடுத்து மண் சட்டியில், இரண்டு டம்ளர் நீர் விட்டு (காயங்களுக்கு ஏற்ப) கொதிக்க வைத்து வடிக்கட்டவும்.
அந்த நீரை புண்களுக்கு காலை, இரவு என இரண்டு வேளைகள் தடவினால் புண்கள் ஆறும். அத்திமரப்பட்டை நீர் புண்ணின் ஆழம் வரைக்கும் சென்று உள்ளிருக்கும் கிருமிகளை நீக்கிவிடும்.
2. ஊமத்தை இலை
கிராமங்களில் வயல்புறங்களில் சாலை ஓரங்களில் ஊமத்தை இலை, பூ, காய் விதை கிடைக்கும். ஊமத்தை இலையை கையளவு எடுத்து மண் போக சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைய அரைத்து முட்டையின் வெள்ளைக்கரு, அரிசி மாவு கலந்து குழைத்து புண் கட்டி, வீக்கம் இருக்கும் இடங்களில் தடவினால் புண்கள் ஆறும்.
இந்த பற்று காய காய துடைக்கமால் அதன் மேலேயே பற்று போட வேண்டும். இவை புண், கட்டி உள்ளிருக்கும் சீழ், கிருமிகளை உறிஞ்சு எடுத்து, மறுநாள் காலையில் பார்க்கும் பொழுது புண்ணின் தழும்பு தெரியும். இப்படி தொடர்ந்து 5 நாட்களுக்கு போட வேண்டும்.
3. கடுக்காய்த்தூள்
நாக்கில் அல்லது வாயில் புண் வந்து விட்டால் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கடுக்காய்தூள், காசுக்கட்டி தூள் வாங்கி வைத்து கொள்ளலாம்.
அதனை தினமும் காலையில் பசு நெய்யில் கடுக்காய்த்தூளையும், காசுக்கட்டி தூளையும் 5 முதல் 10 சிட்டிகை வரை எடுத்து நாக்கு, உதடு பகுதியில் தடவி வரவேண்டும். தினமும் காலையும் மாலையும் செய்து வந்தால் உதட்டில் இருக்கும் புண்கள் ஆறும். வயதிற்கேற்ப அளவை மாற்றிக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
