டாய்லட்டில் ஃப்ளஷ் பண்ணும் இத கவனிச்சீங்களா? இனி தெரியாமல் கூட பண்ணாதீங்க
நாம் தினமும் பார்க்கும் விஷயங்களைப் பற்றி சில சந்தேகங்கள் இருந்தாலும், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள பெரியதாக யாரும் ஆர்வம் காட்டிருக்கமாட்டார்கள்.
உதாரணமாக, போக்குவரத்து சிக்னல் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது, காவல் துறையினர் ஏன் காக்கி நிற உடை அணிகிறார்கள் உள்ளிட்ட பல கேள்விகள் நமக்குள் வந்திருக்கும்.
அப்படி வந்த சந்தேகங்களில் ஒன்று தான் டாய்லட் ப்ளஷ் பட்டனில் ஏன் சின்னதாக ஒன்றும், பெரியதாக ஒன்றும் இரண்டு பட்டன்கள் உள்ளது.
இது போன்று இரண்டு பட்டன்கள் இருப்பது வெறும் நேர்த்தி மற்றும் அழகுக்காக மட்டுமல்ல, அதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.
அந்த வகையில், டாய்லட் ப்ளஷ் ஏன் இரண்டு பட்டன்கள் உள்ளன? அதற்கான யதார்த்தமான விளக்கத்தை தொடர்ந்து எமது பதிவில் காணலாம்.
இரண்டு பட்டன்கள் இருப்பது ஏன்?
பெறும்பாலும் நவீன கழிப்பறைகளில் dual-flush அமைப்பு தான் இருக்கும். இரண்டு வெவ்வேறு Flush வசதிகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த flush-ல் ஒன்று குறைவான தண்ணீரையும், மற்றொன்று அதிகமான தண்ணீரையும் வெளியேற்றும்.
இது நீங்கள் வெளியேற்றும் கழிவுகள் பொறுத்து உள்ளன. சிறிய பட்டன் திரவக் கழிவுகளை (சிறுநீர் போன்றவை) சுத்தப்படுத்துவதற்கானது,பெரியது திடக்கழிவுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வசதிக்காக மட்டுமல்ல, தண்ணீரை சேமிக்க உதவும் புதுவிதமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
எவ்வளவு தண்ணீர் சேமிக்கப்படுகிறது?
சராசரியாக, ஒரு வீடு இரட்டை ஃப்ளஷ் கழிப்பறையை சரியாகப் பயன்படுத்தினால், ஒவ்வொரு ஆண்டும் 20,000 லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.
அறிக்கையின்படி, சரியானதொரு பட்டனைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் ஆண்டுதோறும் 200 முறை குளிப்பதற்கு தேவைப்படும் நீர் மிச்சமாக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருப்பதைத் தவிர, தண்ணீர் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழிமுறையாகவும் பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |