கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் ... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தனித்துவ குணங்கள் ஆகியவற்றிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடனும் குறையாத பணத்துடனும் இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே தலைமைத்துவ குணம் கொண்டவர்களாகவும், நிதி முகாமைத்துவ அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களிடம் அசாத்தியமான மன உறுதி மற்றும் எதையும் சாதித்துவிடலாம் என்ற தைரியம் இருக்கும். கடின உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த தனித்துவ குணங்கள் வாழ்க்கையில் நிதி ரீதியில் உச்சத்தை தொடுவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் வலுவான மன உறுதி, விடாமுயற்சிக்கு மற்றும் தைரியத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால் ஆளப்படுவதால், வாழ்க்கை முழுவதும் ஆடம்பரமாகவும் பணப்பற்றாக்குறை இல்லாமலும் வாழுவார்கள்.
அவர்கள் எதார்த்தவாதிகளாகவும், பணத்தை சரியாக நிர்வகிப்பதில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் கலையை அறிந்தவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மற்றவர்களை வார்த்தைகளால் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் இருக்கும் வசீகரத்தன்மை மற்றும் படைப்பாற்றல் இவர்களை கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக மாற்றுகின்றது.
இவர்கள் கடினமான சூழ்நிழலைகளிலும் நிதானமாக சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வெளித்தோற்றத்துக்கு பதற்றமானவர்கள் போல் தோன்றினாலும், இயல்பில் மிகுந்த பொறுமையுடன் தெளிவான முடிவெடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |