சூரியன் புதன் இணைவால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்... டபுள் ஜாக்பாட் பெறும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட ரீதியில் கிரகங்களின் பெயர்ச்சியும், கிரங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசிகளின் ராசி பலன் கணிப்பில் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
இந்த வகையில் கிரகங்களின் அரசனாக திகழும் சூரிய பகவான் மற்றும் மற்றும் அறிவாற்றல், கல்வி மற்றும் புத்திகூர்மையின் காரணிதாரரான கிரகங்களின் இளவரன் புதனும் மே 15, 2026 அன்று, ரிஷப ராசியில் பிரவேசிப்பதால் அதி சக்திவாய்ந்த புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன.

இந்த இரட்டைப் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் ராஜ யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியில் உச்சகட்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.
ரிஷபம்

சூரியன், புதன் உருவாக்கும் ராஜயோகத்தின் தாக்கமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியில் உச்சகட்ட சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
இவர்களின் நிதிநிலை சூரியன் ஆசியால் பெரியளவில் ஏற்றம் காணப்போகின்றது. கடந்த காலங்களில் தொழில் ரீதியாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான முடிவு உண்டாகும்.
கடந்த காலத்தில் தடைப்பட்டிருந்த வேலைகள் இப்போது மீண்டும் குறைந்த முயற்ச்சியிலேயே வெற்றிகரமாக முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக மாற்றமானது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அமோகமாக முன்னேற்றத்தை கொடுக்கும்.
இவர்களுக்கு உதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்காக வாய்ப்புகள் கைகூடி வரும். குறிப்பாக சூரியன் ஆசியால் அதிகாரம் மிக்க பதவியில் அமர்வதற்கான வாய்ப்பு அமையும்.
வெளிநாட்டு நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து பெரிய தொகை பணம் பரிசாக கிடைக்கும் யோகம் காணப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கன்னி

சூரியனும் புதனும் ரிஷப ராசியில் பிரவேசிப்பதால், கன்னி ராசியினர் தங்கள் பொருளாதார நிலையில் அசுர வளர்ச்சியை அனுபவிக்கப்போகின்றார்கள்.
புதிய வருமானத்துக்கான வழிகள் திறக்கும். புதிய வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக போராடி வந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும்.
இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை பெற துணைப்புரியும். இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |