செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த ராசிகளுக்கு சொகுசு வாழ்க்கை உறுதி!
ஜோதிட ரீதியில் நவகிரங்களின் நிலையான ராசி பலன் கணிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது. காரணம் கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் ஆற்றல் வாய்ந்த கிரகங்களின் நேர்ககையால் உருவாகும் ராஜ யோகங்கள் 12 ராசிகளின் வாழ்ககையிலும் மாற்றத்தை ஏற்ப்படுத்தும்.
அந்தவகையில், கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக அறியப்படுகின்றார்.

செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பை காட்டும்.
தற்போது செவ்வாய் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 11 ஆம் திகதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.
இதனால் ஆற்றல் வாய்ந்த ருச்சக ராஜயோகம் உருவாவதோடு, சில ராசிகளில் விபரீத ராஜயோகத்தையும் செவ்வாய் உருவாக்கவுள்ளார்.அதனால் உச்சகட்ட அதிர்ஷ்டத்தை அனுபவிக்ப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்ககலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்கவுள்ளதால், இவர்களின் தொழில் வாழ்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
குறிப்பாக இவர்கள் இந்த காலகட்டத்தில் புதிய தொழில் ஆரம்பித்தால் அமோக முன்னேற்றம் உறுதி. இவர்களின் பொருளாதார நிலை நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு செல்லும்.
இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு ஆடம்பட வாழ்க்கையை அனுபவிப்பதற்கான யோகம் உண்டாகும். மீடியா துறையில் இருப்பவர்களுக்கு ராஜ யோகம் நிச்சம் உண்டு.
கன்னி

கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்குவதால் இவர்களுக்கு எதிர்ப்பாரத விதமாக திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
இவர்களின் தொழில் மற்றும் வியாபரம் இந்த காலகட்டத்தில் அசுர வளர்ச்சி காணும். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுப்படுபவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால் ஆரோக்கியம் தொடர்பாக சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் குறைந்த முயற்ச்சிகளிலேயே உச்சகட்ட வெற்றி உறுதி.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்குவதால், இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சாதக பலன்கள் கிடைக்கும்.
இவர்களின் நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
தொழில் ஸ்தளத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். புதனின் ஆசியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |