கோடைகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?
கோடை காலத்தில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக வெயில் காலம் ஆரம்பித்துவிட்டால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக கவனம் இருக்க வேண்டும்.
ஆம் வெப்பத்தை அதிகரிக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற மசாலா பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக காரணம் நிறைந்த உணவுகள் வயிற்றுப் பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
வெப்பம் நிறைந்த கோடை காலத்தில் எண்ணெய்யில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதுடன், உடல் பருமன் மற்றும் கொழுப்புச்சத்தை அதிகரிக்கின்றது.
அதிகமாக காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை நீரிழப்பை அதிகரிப்பதுடன், உடலில் வெப்பநிலையை உயர்த்துகின்றது.
மேலும் இனிப்பு பண்டங்கள் மற்றும் தீனிகள் உடல் வெப்பத்தை அதிகரிப்பதுடன், நீரிழிவு உடல் பருமன் போன்ற நோயை ஏற்படுத்துகின்றது.
செயற்றை சுவையூட்டிகள் நிறைந்த குளிர்பானங்கள், சர்க்கரை இவைகளும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், நீரிழப்பையும் அதிகரிக்கும்.
அசைவ உணவுகளான நண்டு, இறால், சிக்கன் போன்றவற்றினை சாப்பிடுவதை தவிர்ப்பதுடன், புளிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளையும், கிழங்கு வகைகள், கத்தரிக்காய் இவற்றினையும் தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |