கோடையில் சுற்றுலா செல்லணுமா? திண்டுக்கல்லில் இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க
சுட்டெரிக்கும் இந்த வெயில் சீசனில் நாம் கண்டிப்பாக சுற்றுலா செல்ல ஒரு இதமான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி யோசிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவாக அமையும்.
திண்டுக்கல் சுற்றுலா தலங்கள்
சிறுமலை காப்புக் காடு: திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், 18-வது கொண்ட ஊசி வளைவுகளை கடந்து சென்றா சிறுமலை காப்பு காட்டை அடையலாம். இந்த இடம் மிகவும் குளுமையாக இருக்கும்.
மன்னவனூர் ஏரி: இத தணிடுக்கல் அருகே உள்ளது. இதன் இயற்கை எழில் கொஞ்சும் சூழல் கண்களை கவரும் வகையில் இருக்கும். இங்கு நீர்நிலைகள் நிறைந்து பச்சை புல்வெளிகள் என அனைத்தும் இருக்கும்.
பழனி முருகன் கோவில்: ஆன்மீக தலத்திற்கு செல்ல விரும்புவர்கள் இந்த பழனி முருகன் கோவிலுக்கு செல்லலாம். இந்தக் கோயிலில் உள்ள முருகன் சிலை, போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, முருகனின் கோயில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு வெப்பத்தின் தாக்கம் இருக்காத.
கொடைக்கானல்: திண்டுக்கல்லில் மிக முக்கியமான சுற்றுலா தலமாக இருப்பது கொடைக்கானல். இந்த இடத்திற்கு பல சுற்றுலா பயணிகள் ஈர்க்கப்படுகின்றனர்.
இது மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகின்றது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க ஏற்ற இடமாக கொடைக்கானல் இருக்கும். எனவே இதுபோன்ற இடங்களை மிஸ் பண்ணாமல் பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |