இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 4.7 கோடி ஆண்டுகள் பழமையான பாம்பு...சுவாரஸ்ய தகவல்
குஜராத்தில் சமீபத்தில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் போது விஞ்ஞானிகளால் ஒரு பழங்கால ராஜ நாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கண்டுபிடிக்கபட்ட பாம்பு
குஜராத்தின் கட்ச் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் உலகின் மிகப்பெரிய பாம்பின் கதையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
வாசுகி இண்டிகஸ் என்று பெயரிடப்பட்ட இந்த வரலாற்றுக்கு முந்தைய பாம்பு 49 அடி நீளமும் 1,000 கிலோகிராம் எடையும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இதுவரை இருந்த மிகப்பெரிய பாம்பான டைட்டனோபோவாவை கூட மிஞ்சும்.
ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் 20 வருட ஆய்வுக்குப் பிறகு இந்தக் கண்டுபிடிப்பை வெளியாக்கி உள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு அறிவியல் பார்வையில் முக்கியமானது மட்டுமல்ல, இந்து புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ள வாசுகி நாகத்துடன் இணைக்கிறது.
குஜராத்தின் கட்ச் கடற்கரையில் உள்ள பனந்த்ரோ லிக்னைட் சுரங்கத்தில் 27 முதுகெலும்புகளின்புதைபடிவங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் இது ஒரு முதலையின் எச்சங்கள் என்று கருதப்பட்டது ஆனால் தீவிர ஆய்வின் பின் அது வாசுகி இண்டிகஸ் என்ற ராட்சத பாம்பு என்பது தெரியவந்தது.
இந்தக் கண்டுபிடிப்பு இப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புராணப் பிரியர்களின் ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. இது சுமார் 42 அடி நீளம் வரை இருந்ததாக மதிப்பிடப்பட்ட டைட்டனோபோவா இதுவரை வாழ்ந்தவற்றிலேயே மிகப்பெரிய பாம்பாகக் கருதப்படுகிறது.
ஆனால் வாசுகி இண்டிகஸ் 49 அடி நீளம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதுஇது உலகின் மிக நீளமான பாம்பாக இருக்கலாம். மேலும் அதன் அகலமும் உருளை வடிவ உடலும் நம்மை இன்னும் பயமுறுத்துகிறது.
இந்து புராணங்களில் சிவபெருமானின் கழுத்தில் வாசுகி என்ற பாம்பு இருக்கும் என நாம் முந்தய புராணங்களில் கேள்விப்பட்டிருப்போம். எனவே தான் இந்த வாசுகி என்ற பாம்பை வைத்து தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாம்பிற்கு வாசுகி இண்டிகஸ் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
இதை இந்தியாவில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் தொடர்ந்து இதுபோன்ற பாம்புகள் பூமியில் கண்டுபிடிக்கபட்டாமல் உள்ளதா என ஆராய்ச்சி செய்யபட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
