கோடையில் தினமும் ஒரு எலுமிச்சை கட்டாயம் எடுத்துக்கோங்க! ஏகப்பட்ட நன்மையை பெறலாம்
கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், தினமும் ஒரு எலுமிச்சையை எடுத்துக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
கோடையில் தினமும் ஒரு எலுமிச்சையை எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆரோக்கிய நன்மைகள்
எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வதால் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை சரியாவதுடன், எலுமிச்சையில் இயற்கையாகவே நச்சு நீக்கும் பண்புகளும் உள்ளது. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நச்சுக் வெளியேறி கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
சிறுநீரக கற்களால் அவதிப்பட்டால், உணவில் எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளலாம். இதலுள்ள அதிகமான சிட்ரேட் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், சிறுநீரக கற்கள் பிரச்சனை வராமலும் தடுக்கின்றது.
ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுவதுடன், இதிலுள்ள முக்கிய கூறுகளான பாலிஃபீனால்கள், இன்சுலின் எதிர்ப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இதிலுள்ள வைட்டமின் சி சத்துக்கள் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் செய்கின்றது.
உடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதிலுள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ப்ரீபயாடிக் ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
