புதன் சுக்கிர இணைப்பு... இரட்டிப்பு ராஜயோகத்தை அடையும் ராசிக்காரர்கள் இவர்களா?
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒரே ராசியில் இரண்டு கிரங்களின் இணைவு அல்லது சேர்க்கை எனப்படும். ஜூலை 13 அன்று, சுக்கிரன் மிதுன ராசியில் பிரவேசித்தார். இங்கு ஏற்கனவே புதன் கிரகம் இருந்தது.
இதன் பலன் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த மகத்தான யோகத்தால் அளவுகடந்த நன்மைகளை அடைவார்கள். யார் அந்த அதிர்ஷ்ட ராசியினர்கள் என்று பார்ப்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மகாராஜ யோகம் உருவாகி வருவதால் இந்த ராசிக்காரர்கள் குறிப்பாக அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப்போகின்றன. இவர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் 2 ராஜயோகங்கள் உருவாகி வருகின்றன.
புதன் தனது சொந்த ராசியில் இருப்பதால் பத்ரா என்ற ராஜயோகம் உருவாகி வருகிறது. அதே சமயம் சுக்கிரனுடன் புதன் சேர்ந்து இருப்பதால் கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகி வருகிறது.
இந்த இரட்டிப்பு ராஜயோகத்தால் உலக ரீதியான மகிழ்ச்சிகள் உண்டாகும். அதாவது பொருள் சேரும், செல்வம் பெருகும். அதே சமயம் பத்தாம் இடத்தில் குரு இருப்பதால் ஹன்ஸ் என்ற ராஜயோகமும் உருவாகிறது.
இதனால், மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அறிவாற்றல் அதிகரிக்கும், மன நிம்மதி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த இந்த ராஜயோகம் சாதகமாக அமையும். இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்திலும், புதன் கிரகம் பத்ரா என்ற ராஜயோகத்தை உருவாக்குகிறது.
இந்த யோகம் வியாபாரத்தில் அதிகப்படியான லாபத்தை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை அடைவீர்கள். தொடர்ந்து, வேலை செய்பவர்கள் பணியிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பைப் பெறலாம்.
இந்த கலாத்தில் பாக்கியம், கர்மா மற்றும் செல்வத்தின் அதிபதிகளான பாக்யேஷ், கர்மேஷ், தனேஷ் ஆகியோர் உடன் இருப்பதால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியினர்களுக்கு பெயர்ச்சி ஜாதகத்தில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகி வருகின்றன. இதில் ருச்சக், ஷஷ் என்ற ராஜயோகம் உருவாகி வருகிறது.
இதனால் இந்த இரண்டு ராஜயோகங்களும் திடீர் பண பலன்களைத் தரும். நீங்கள் சில புதிய வேலைகளைச் செய்ய விரும்பினால், அதற்கு இந்த நேரம் சாதகமானதாக இருக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு இது சரியான நேரமாக இருக்கும். நீங்கள் வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், தற்போது அதற்கு ஏற்ற நேரம். உங்கள் ராசியில் ஏழரை நாட்டு சனி நடக்கிறது.
இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்