Tamizha Tamizha: கணவரின் பெண் தோழியை அசிங்கப்படுத்திய மனைவி... கண்கலங்க வைத்த பாடம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் திருமணத்திற்குப்பின் தொடரும் ஆண், பெண் நட்பு... பிரியமான தோழன் - பிரியமான தோழி என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் திருமணத்திற்குப்பின் தொடரும் ஆண், பெண் நட்பு... பிரியமான தோழன் - பிரியமான தோழி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் பெண் ஒருவர் திருமணமாகி ஹனிமூனுக்கு கணவர் மட்டுமின்றி தனது நண்பரையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
மற்றொரு பெண் தனது கணவரின் தோழி, கணவரிடம் பேசுவது, நடந்து கொள்வது அனைத்தையும் பார்த்து பொறாமை கொண்ட நிலையில் 3 ஆண்டுகள் பேசாமலும் இருந்துள்ளனர். இறுதியில் அந்த பெண் தோழி கொடுத்த இன்ப அதிர்ச்சியால் குறித்த பெண் தலைகுனிந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |