கைரேகை சாஸ்த்திரம்: சீக்கிரம் இறக்க போவரின் கைரேகை எப்படி இருக்கும் தெரியுமா?
பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் தங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும்.
அப்படி இல்லை என யாராவது உங்களிடம் கூறினால் அவர்கள் பொய் கூட கூற வாய்ப்ப உள்ளது. ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ராசி, நட்சத்திரங்கள் கணிக்கப்படுகின்றன.
ஜோதிடத்தில் கூறப்பட்டது போன்று பிறந்த நேரம் சரியாக தெரியாவிட்டால் ராசி, நட்சத்திரங்களை கணிக்க முடியாத நிலை உருவாகும். அப்போது ஜோதிடர்கள் உங்களது கைரேகை அடிப்படையாக வைத்து எண்கணித முறைப்படி உங்களது எதிர்காலம் எப்படி உள்ளது என கூறுவார்கள்.
கைரேகையை வைத்து ஒருவரது வேலை-வணிகம், அதிர்ஷ்டம், திருமணம், உடல்நலம் போன்றவற்றை கணிக்க முடியும். இவ்வளவு விஷயங்களையும் கையை பார்த்தவுடன் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

ஒரு தனி மனித அடையாளம் முகத்தில் எப்படி உள்ளதோ அதே அளவிற்கு அவர்களது கைரேகையிலும் உள்ளது. உலகில் நீங்க என்ன குற்றம் செய்தாலும் உங்களது ரேகையை வைத்து நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
செல்வம், சொத்து இவை இரண்டும் வாழ்க்கையின் முக்கியமானதாகி விட்டது. மனிதர்கள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை வைத்து உங்களை மதிப்பதில்லை. மாறாக உங்களிடம் சொத்துக்களே நீங்கள் யார் என்பதை வெளி உலகிற்கு காட்டிக் கொடுக்கிறது.
கைரேகை எனக் கூறும் பொழுது ஏகப்பட்ட ரேகைகள் உங்கள் கையில் உள்ளன. ஆனால் ஜோதிடம் குறிப்பிட்ட நான்கு ரேகைகளை மட்டுமே வைத்து நீங்கள் யார் என்பதை கணிக்கிறது.

1. ஆயுள்ரேகை
- உங்கள் கையின் மணிக்கட்டிலிருந்து கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வில் போன்று அமைப்பில் வளைந்து செல்லும் ரேகை ஆயுள் ரேகையாக பார்க்கப்படுகிறது.
இதன் நீளம் மற்றும் அடர்த்தியை வைத்து அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை கணிக்கலாம். உதாரணமாக, உங்கள் கையில் இந்த ரேகை நீளமாக இருந்தால் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்.
அதே சமயம், வளைந்து வளைந்து அல்லது துண்டங்களாக்கப்பட்டு இருந்தால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை உள்ளது என அர்த்தமாகும்.

2. இருதய ரேகை
- உங்களது கையின் சுண்டு விரலுக்கு கீழே ஆரம்பித்து ஆள்காட்டி விரலை நோக்கி நீளமாக அமைந்துள்ள ரேகையை இருதய ரேகை என்கிறார்கள். இந்த ரேகையானது ஆள்காட்டி விரலுக்கு மேல் சென்றால் அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். அதே சமயம், கை விரல்களுக்கு இடையில் செல்லாமல் மேட்டை நோக்கிய நிலையில் இருந்தால் அவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்களாம். கை விரல்களுக்கு நடுவில் பள்ளத்தை அமைத்து கொண்டு சென்றால் அவர்களிடம் பொறுமை என்ற பேச்சிக்கே இடம் இல்லையாம்.

3. புத்தி ரேகை
- ஆயுள் ரேகையையும், இருதய ரேகையையும் பிரித்து கொண்டு நடுவில் செல்லும் ரேகையை புத்தி ரேகை என்கிறார்கள். இதுமணிக்கட்டை நோக்கி மடங்கி மணிக்கட்டை நோக்கி சென்றால் அவர்கள் உணர்ச்சிகரமான முடிவுகளை அதிகமாக எடுப்பார்கள்.அத்துடன் சுக்கிர மேட்டை நோக்கி சென்றால் புத்திசாலிகளாக இருப்பார்களாம். இவை இரண்டையும் தவிர்த்து ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் சேர்ந்து இல்லாமல் தனித்தனியே பிரிந்து சென்றால் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். உங்களது ரேகையை சரியாக பார்த்து நீங்கள் எப்படியானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

4. விதி ரேகை
- விதி ரேகையானது, மணிக்கட்டிலிருந்து இருதய ரேகைக்கும் புத்தி ரேகைக்கும் இடையில் நேராக செல்லும் ரேகையை குறிக்கிறது. இதனை பார்த்து தான் நீங்கள் எதிர்காலத்தில் எவ்வளவு பெயரும் புகழுடனும் இருப்பீர்கள் என்பதை கண்டுபிடிக்கலாம். நம்மிள் சிலருக்கு இந்த ரேகையே இருக்காது. இதனால் அவர்களது வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |