நடைபயிற்சி முடித்து வந்த உடனேயே குளிக்கலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
நடைபயிற்சி முடித்து வந்த உடனேயே குளிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கான பதிவே இதுவாகும்.
நடைபயிற்சி
வெயிலில் நடைபயிற்சி சென்று திரும்பி வந்ததும் உடல் வெப்பம் அதிகரிக்கும். இத்தருணத்தில் பலரும் வந்த உடனே குளித்துவிடுவார்கள். ஆனால் இந்த பழக்கம் தவறானது என்பதை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
அதாவது நடைபயிற்சி முடிந்தவுடன் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும். உடலில் வெப்பம் குறைந்த பின்பே குளிக்க வேண்டும். அதாவது உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் போது குளிர்ந்த நீரில் குளித்தால் இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படலாம்.
உடல் வெப்பமாக இருக்கும்போது குளிர்ந்த நீரில் குளித்தால், தலைசுற்றல், சோர்வு அல்லது சில நேரங்களில் உடல் வலியும் ஏற்படலாம்.
அதாவது நடைபயிற்சி முடித்து 5 அல்லது 10 நிமிடங்கள் நிழலில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். ஒய்விற்குப் பின்பு தண்ணீர் குடிக்கவும். இவை உடலை உள்ளிருந்து குளிர்ச்சியடைய செய்கின்றது.
பின்பு லேசாகக் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் குளிக்கலாம். சோப்பு, அலோவேரா (Aloe vera) அடங்கிய பாடி வாஷ் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். குளிக்கும்போது கழுத்து, காது, கால்கள் போன்ற பகுதிகளை மெதுவாகத் தேய்த்துக் குளிக்கவும்.
முடிவாக சொல்ல வேண்டும் என்றால், நடைபயிற்சி முடிந்ததும் உடனடியாகக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, உடலில் உஷ்ணம் தணிந்த பின்னர் குளிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |