chanakya topic: வெற்றியாளர்களிடம் இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்... என்னென்ன தெரியுமா?
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த வகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் வெற்றியளராகும் தகுதியுடையவர்களிடம் கட்டாயமாக இருக்க வேண்டிய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் குணம்
சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்வில் வெற்றியாளர்களாக மாறப்போகும் நபர்கள் தங்களின் தவறுகில் இருந்து மட்டமல்லாது மற்றவர்களின் பிழைகளில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த குணம் இருப்பவர்கள் அவர்களின் வாழ்வில் எளிமையாக தடைகளை கடந்து முன்னேறுகின்றார்கள்.
தோல்வியை கண்டு மனம் தளராத குணம்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் வாழ்வில் வெற்றியடைபவர்கள் ஒருபோதும் தோல்வியை கண்டு பயப்பட மாட்டார்கள்.
இவர்கள் தோல்விகளிலிருந்து எதை கற்றுக்கொண்டார்கள் என்பதை பற்றி மட்டுமே சிந்திப்பார்களே தவிர இதற்கான வருத்தப்பட மாட்டார்கள்.
கடந்த காலத்தை பற்றிய சிந்தனை இவர்களுக்கு கொஞ்சமும் இருக்காது. இதுவே அவர்களின் வெற்றியின் ரகசியமாக இருக்கப்போகின்றது.
மரியாதை இல்லாத இடத்தில் வாசிக்கக்கூடாது
சாணக்கியரின் கருத்துப்படி ஒரு நபர் தன்னை மதிக்காத இடத்தில் ஒரு நொடி கூட இருக்க கூடாது.
தனக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் இடத்தை சரியாக தெரிவு செய்பவன் வாழ்வில் நிச்சயம் வெற்றியடைவான் என்பது உறுதி.
அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இருக்கக்கூடாது
வாழ்க்கையில் வெற்றிபெற நினைப்பவர்கள் தங்களின் உழைப்பையும் முயற்சியையும் தான் முழுமையாக நம்பியிருப்பாரை்கள். இவர்கள் அதிர்ஷ்டத்துக்காக காத்திருக்க மாட்டார்கள்.
எத்தகை தடைகள் வந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் குணம் இவர்களுக்கு நிச்சயம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஏதோ ஒரு சக்தி காப்பாற்றும் என வெறுமனே நம்பிக்கொண்டு முயற்சி இல்லாமல் இருக்க மாட்டார்கள்.
தவத்தின் பலன்
சாணக்கியரின் கருத்துப்படி தவத்தின் மூலம் எதையும் அடையலாம். தவத்தின் பலன் நிச்சயம் வெற்றியாகத்தான் இருக்கும் என்கின்றார்.
இவர் தவம் என்று குறிப்பிடுவது ஒரு நபர் தனது இலக்கை நிர்ணயித்துவிட்டால் பசி, தாகம், தூக்கம் , காமம், ஆசை என எதையும் பொருட்படுத்தாது லட்சியத்தின் மீது குறிவைக்கும் குணத்தையே குறிப்பிடுகின்றார். இது வெற்றியாளர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய குணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |