பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் மாணவி: வைரல் வீடியோ
மாணவி ஒருவர் அவர் பயிலும் பள்ளியின் கழிவறையை சீருடையுடன் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைகளில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பரபரப்பை கிளப்பிய சம்பவம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆலம்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது!
அந்த மாணவி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் , அந்த மாணவியை யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை கழுவ சொன்னார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் என்பது தெரியவில்லை.
மாணவி கழிப்பறையை கழுவும் காட்சிகளை யாரோ ஒருவர் ஒளிப்பதிவு செய்வது தெரிய வருகிறது அந்த நபர் யார் என்பதும் தெரியவில்லை.
உரிய விசாரணை- கொந்தளித்த மக்கள்
இந்த காட்சி ஆலம்பாக்கம் கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை இதனை விசாரணை மேற்கொண்டு இதில் ஏதேனும் உள்நோக்கம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பவதி தொடர்புகொண்டு கேட்கும்போது, பள்ளியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள கிராம தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள், தினந்தோறும் அவர்கள் மூலம் பள்ளி வளாகம் கழிவறை அனைத்துமே தூய்மைபடுத்தப்படுகிறது இந்நிலையில் மாணவியை எதற்காக கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.

மேலும் படிக்க- வெயிலில் நடந்து வந்த மூதாட்டிக்கு உதவிய போலீஸ்