ரோட்டுக்கடை பாணியில் அசத்தல் பொட்டுக்கடலை சட்னி... எப்படி செய்வது?
பொதுவாக பல்வேறு வகையான உணவுகளை பெரிய ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட்டிருந்தாலும் சில உணவுகளை ரோட்டுகளில் சாப்பிடுவதன் இன்பமே அலாதியானது.
அந்தவகையில் ரோட்டுகடை பொட்டுக்கடலை சட்னியை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படியும் விரும்பாதவர்கள் இருந்தால், அதனை சுவைத்ததில்லை என்றே அர்த்தம்.

அப்படி அனைவரும் விரும்பும் ரோட்டு கடை பொட்டுக்கடலை சட்னியை வீட்டிலேயே மிகவும் எளிமையான படிமுறைகளில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 5
சின்ன வெங்காயம் - 6
புளி - சிறிய துண்டு
பொட்டுக்கடலை - 1/2 கப்
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1தே.கரண்டி
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை 1 கொத்து

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,அதில் ண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் ஆதிகவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதில் புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, ஒரு தட்டிற்கு மாற்றி நன்றாக ஆறவிட வேண்டும்.

பின்னர் அதே பாத்ததில் பொட்டுக்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியான எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வறுத்து குளிர வைத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அத்துடன் பொட்டுக்கடலையையும் சேர்த்து, தேங்காய், சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் ரோட்டுக்கடை பாணியில் அசத்தல் சுவை பொட்டுக்கடலை சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |