சமோசா பிரியர்களே ஷாக் ஆகிடாதீங்க! ஊதா மற்றும் சிகப்பு நிறத்தில் சமோசாவா?
டெல்லியை சேர்ந்த Samosa Hub என்ற உணவகம் ஒன்று, புதிய ரக சமோசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுவித சமோசா
நாம் ஏற்கனவே வெங்காய சமோசா, உருளைக்கிழங்கு சமோசா இவற்றினை சாப்பிட்டு ருசித்திருப்போம். ஆனால் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஃப்ளூபெர்ரி சமோசா குறித்து கேள்விப்பட்டதுண்டா?...
புதுமையாக Strawberry சமோசா, மற்றும் blueberry சமோசாகளை தயார் செய்து வழங்கி உணவு பிரியர்களுக்கு வழங்கி வருகிறது பிரபல Samosa Hub உணவகம்.
வழக்கமாக மேற்குறிப்பிட்ட சமோசாக்களான உருளைக்கிழங்கு சமோசா மற்றும் வெங்காய சமோசா ஆகியவை முறையே உருளைக்கிழங்கு மசாலாக்கள் மற்றும் வெங்காய ஃப்ரை மசாலா கொண்டு நிரப்பப்பட்டு இருக்கும் என்றால், இந்த புதிய சமோசாக்களோ, strawberry jamஐ கொண்டு நிரப்பப்படுகின்றன.
Burning Spices என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த சமோசா குறித்து தகவல்கள் வெளியானது முதலே, வழக்கமான உணவுப்பிரியர்கள் பலரும், உடனே இந்த சமோசாவை சுவைத்து பார்த்து, ஒரிஜினல் சமோசாவுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.