10 நிமிடத்தில் சுவையான அப்பளம் சமோசா - செய்வது எப்படி?
பல வகையான சமோச வகைகளை சாப்பிட்டு இருப்போம். ஆனால், இப்படி ஒரு வகையான அப்பள சமோசாவை சாப்பிடத்துண்டா? எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அப்பளம் - 10,
காய்கறி பொரியல் - 50 கிராம்,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
முதலில் ஒரு அப்பளத்தை தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து பாதியாக கட் செய்து, ஒரு பாதியின் இரு முனைகளையும் நன்றாக கைகளால் அழுத்தி ஒட்டி கோன் வடிவத்தில் செய்யவும்.
அடுத்து, இதில் காய்கறி பொரியலை வைத்து, ஓரங்களை அழுத்தி ஒட்டி விடவும்.
இதே போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.
பின்னர், கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான அப்பளம் சமோசா ரெடி.