கடலில் இருந்து வெளிவந்த விசித்திர உயிரினம்: வேற்றுக்கிரகவாசிகளா? அச்சத்தில் மக்கள்
வேற்றுக்கிரக வாசிகள் போல ஒரு விநோத உருவம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதால் அப்பகுதியில் வாழும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவரால் பகிரப்பட்ட புகைப்படம் சமூக ஊடக பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேற்றுகிரகவாசிகளா?
இறந்த தாவரங்களின் புகைப்படங்களை கடலில் இருந்து வெளிவரும் வேற்றுகிரகவாசிகள் என்று தவறாகக் நினைத்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 62 வயதான ஜோன் வோர்ஸ்டர் என்பவர், தனது வீட்டுக்கு அருகே உள்ள ஸ்டில் பெ கடற்கரையோரங்களில் காலை மற்றும் மாலையில் ஒரு குறிப்பிட்ட உருவத்தை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
குறித்த படத்தில் இருந்த உருவம் பார்ப்பதற்கு வினோதமாக இருந்ததால் அதை இணையவாசிகள் வேற்றுகிரக உயிரினம் ஏதோ கடலில் இருந்து கரை ஒதுங்கியுள்ளது என்று நினைத்து பீதியடைந்துள்ளனர்.
இதனைப்பார்த்த மக்கள் தென்னாபிரிக்க கடலில் இருந்து வேற்றுகிரக வாசிகள் வெளிவருவதாக அந்த படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப்படம் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இறந்த கற்றாழை செடிகள்
ஜோன் வோர்ஸ்டர் எடுத்ததோ கடலில் இருந்து கரை ஒதுங்கிய இறந்த கற்றாழை செடிகளைத்தான்.
அதை அவர் ஒரு ரசனைக்காக, வித்தியாசமான பட அமைப்பிற்காக காலையிலும் மாலையும் மங்கும் வெளிச்சத்தில் எடுத்துள்ளார்.
அந்த ஒளியில் கவிழ்ந்து கிடந்த கற்றாழை செடி ராட்சச சிலந்தி போலவும், வேற்றுகிரகவாசி போலவும் இருந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
இதைப்பார்த்த மக்கள் வேற்றுக்கிரக வாசிகள் என நினைத்து பீதியடைந்துள்ளனர். பின்னர் அவரே இது வேற்றுகிரகவாசிகள் இல்லை. அவை வெறும் கற்றாழை செடிகளே என்று விளக்கம் கொடுத்துள்ளார்.